‘‘ஆரம்பிக்கலாம்ங்களா’’ - அரசியலை முடித்து சினிமாவுக்கு தயாரான கமல்ஹாசன்

politics kamal master lokesh
By Jon Apr 07, 2021 04:50 PM GMT
Report

தமிழகத்தில் தேர்தல் முடிந்துள்ளதால் நடிகர் கமல் விக்ரம் படத்திற்கான படபிட்டிப்பை மீண்டும் தொடங்கியுள்ளார் . மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களைத் தொடர்ந்து அடுத்ததாக நடிகர் கமலை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் டீசர் கடந்தாண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக உள்ள கமல்ஹாசன், தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமானதால் படபிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் தமிழகத்தில் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முடிந்துள்ளதால் மீண்டும் விக்ரம் படத்தின் படபிட்டிப்பு தொடங்கியுள்ளது. இதனை உறுதிசெய்யும் விதமாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் “ஆரம்பிக்கலாம்ங்களா” என்ற கேப்ஷனோடு கமலுடன் இருக்கும் புகைப்ப்டத்தை பதிவிட்டுள்ளார்.