என்ன ஒரு நட்பு...! - ரஜினி, கமல் நட்பை பார்த்து வியந்த லோகேஷ் - வைரலாகும் புகைப்படம்

Kamal Haasan Rajinikanth
By Nandhini May 29, 2022 06:56 AM GMT
Report

தமிழ் சினிமாவில் ‘16 வயதினிலே’ படத்தில் கமலுடன் இணைந்து ரஜினி நடித்தார். அப்படத்தில் ரஜினி வில்லனாக நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தார்.

இவரின் நடிப்பைப் பார்த்த கமல், அடிக்கடி ரஜினி நீங்கள்... ஏன் ஹீரோவாக நடிக்கக் கூடாது. இது என்னுடைய ஆசை... நீங்க ஹீரோவாத்தான் நடிக்க வேண்டும் என்று அவ்வப்போது கூறுவாராம். நெருங்கிய நண்பர்களும் ரஜினி மனதில் விதை போட ஹீரோவா நடிக்க ஆரம்பித்தார் ரஜினி.

ஒருபுறத்தில் கமல் நடித்து வந்த படங்கள் சூப்பர் ஹிட். மற்றொரு புறம் ரஜினி நடித்து வந்த படங்கள் மெகா ஹிட். இவர்கள் இருவருக்கும் ரசிகர்கள் பட்டாளமே உருவாகத் தொடங்கியது.

இதனால், ரஜினி ரசிகர்களுக்கும், கமல் ரசிகர்களுக்குமே போட்டி இருந்து வந்ததே தவிர, ஒருபோதும், கமலுக்கும், ரஜினிக்கும் இடையே நல்ல நட்புறவு இன்று வரை நிலவி வருகிறது. இருவரும் 60 வயதை கடந்தாலும், இன்றைக்கு வரைக்கும் நல்ல நண்பர்களாகவே இருந்து வருகின்றனர்.

மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர்கள் கமல் ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் ஃபஹத் ஃபாசில் வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.

இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளரான அனிருத் இசை அமைத்துள்ளார். இதுவரை படத்தில் இருந்து வெளியிடப்பட்ட அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விக்ரம் படம் வரும் ஜூன் 3-ம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் லோகேஷ், ரஜினி, கமலைச் சந்தித்த புகைப்படத்தை வெளியிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், நன்றி @ikamalhaasan ஐயா! @ரஜினிகாந்த் ஐயா! என்ன ஒரு நட்பு! inspiring Love you Sir's❤️❤️❤️ என்று பதிவிட்டுள்ளார்.