அந்த நேரத்தில் என்ன பண்ணுவேனு கெளதமிக்கு மட்டும் தான் தெரியும் - கமல்ஹாசன் ஓபன் டாக்!

Sumathi
in பிரபலங்கள்Report this article
நடிகர் கமல்ஹாசன் கெளதமி குறித்த பகிர்ந்த விஷயம் வைரலாகியுள்ளது.
நடிகர் கமல்
தமிழ் சினிமாவில் ரஜினி நடிப்பில் வெளிவந்த குரு சிஷ்யன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை கௌதமி. பின்னர் கமலுடன் அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் நடித்தார். தொடர்ந்து, சந்தீப் பாட்டியா என்ற தொழிலதிபரை காதலித்து 1998ல் திருமணம் செய்தார்.
இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் சில ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்றனர். இவர்களுக்கு சுப்புலட்சுமி என்ற மகள் உள்ளார். அதனையடுத்து, 2005ல் நடிகர் கமலுடன் கிட்டதட்ட பத்து வருடங்கள் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.
ஓபன் டாக்
அதன்பின் அவரையும் பிரிந்துவிட்டார். முன்னதாக இருவரும் பிரபல நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டனர். அதில், விஸ்வரூபம் படம் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டது. அந்த பிரச்சினை குறித்து கமலுக்கு செய்தி வரும் போது கெளதமியும் அருகில் இருந்தார்.
அப்போது ரொம்பவே டென்ஷனாகி ரூமில் சென்று படுத்து தூங்கிவிட்டேன். இப்படி தனக்கு எப்போது பிரச்சினை வந்தாலும் தனியாக போய் படுத்து தூங்கிவிடுவேன். இது கெளதமிக்கு மட்டும் தான் தெரியும் எனத் தெரிவித்துள்ளார்.
You May Like This Video