தாஜ் மஹால் என்னுடையது, மதுரை கோயில் உங்களுடையது : நடிகர் கமல்ஹாசன்
டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சூர்யா நடித்த விக்ரம் படம் ஜுன் 3 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் ப்ரோமோஷன் வேலைகளும் முழு வீச்சில் நடந்து வருகிறது.
சமீபத்தில் விக்ரம் ப்ரோமோஷனுக்கான பிரஸ்மீட் நடைபெற்றது. இதில் கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு, மீடியாக்களின் கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதிலளித்தனர். இதில் கமலிடம் இந்தியன் 2 படம் பற்றி கேட்டதற்கு, இந்தியன் 2 நிச்சயம் வரும்.

படத்தின் ஷுட்டிங் விரைவில் துவங்கப்பட உள்ளது. அதற்கான பேச்சுவார்த்தை நடக்கிறது என்றார்.
அதோடு விக்ரம் 3 படமும் வர உள்ளதாக சஸ்பென்சை உடைத்த கமல், விக்ரம் 3 உருவானால் அதற்கு லோகேஷ் கனகராஜ் தான் டைரக்டராக இருப்பார் என்று கூறி, அனைவரின் ஆர்வத்தையும் தூண்டினார்.
அதோடு சினிமாவை வடக்கு, தெற்கு ஏன் பிரிக்கிறீர்கள்? நான் இந்தியன். நம் சினிமா அனைவருக்கும் பொதுவானது
என்னைப் பொறுத்தவரை தாஜ்மஹால் என்னுடையது, மதுரை கோவில் உங்களுடையது. காஷ்மீர் என்னுடையது போல கன்னியாகுமரி உங்களுடையது, எனக் கூறினார்.