‘‘இளமை மாறாத இளையராஜா அண்ணனுக்கு’’ - கமல்ஹாசன் ட்வீட்

ilayaraja kamalhaasan newyear2022
By Irumporai Dec 31, 2021 11:44 AM GMT
Report

இசைஞானி இளையராஜா இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், கடந்த 39 வருடங்களாக புத்தாண்டுக்கு ஒலிக்கவிடப்படும் பாடலான இளையராஜா இசையில் எஸ்பிபி பாடிய “இளமை இதோ இதோ” பாடலை பாடி அனைவருக்கும் உற்சாகத்தை கொடுத்தார் .

அந்த வீடியோவை பார்த்த அனைவரும் இளையராஜாவின் இளைமை இதோ இதோவை பகிர்ந்துவருகின்றனர். மேலும் இளையராஜா பாடியதை பார்த்த பிறகு 2022ஆம் ஆண்டு மேல் மிகுந்த நம்பிக்கை தோன்றியிருப்பதாகவும் சமூக வலைதளங்களில் கூறிவருகின்றனர்.

 இந்த நிலையில், இளமை இதோ இதோ பாடலுக்கு திரையில் தோன்றி நடனமாடிய கமல் ஹாசன் இளையராஜா பாடிய வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் கமல்ஹாசன் :

இளையராஜாவை 3 நாட்களுக்கு முன்புதான் சந்தித்தேன், இளமை மாறாத ராஜாவாக குதூகலமாக பேசிக்கொண்டிருந்தார்.

அதையும்விட இளமை கூடியவராய் இன்று இணையதளத்தில் இளமை இதோ இதோ என்று பாடியதைப் பார்த்தேன். மனதளவில் என்றும் இளமை மாறாதிருக்கும் அண்ணனுக்கு Happy New year” என பதிவிட்டுள்ளார்.