‘’உனக்கென்ன மேலே நின்றாய் ஓ எங்கள் பாலு’’ -உள்ளம் உருகும் கமல்ஹாசன்!!

மறைந்த பாடகர் எஸ்.பி.பி.யின் 75-வது பிறந்த நாளையொட்டி ட்விட்டரில் கமலஹாசன் தனது நினைவலைகளை பகிர்ந்துள்ளார்.

பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கடந்த ஆண்டு செப்டம்பர் 25 அன்று காலமானார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகா் எஸ்.பி.பி. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

51 நாள்களாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவது இழப்பு ரசிகர்களுக்கும் தமிழ் சினிமாவிற்கும் பெரும் துயரம் என்றுதான் கூற வேண்டும்.

இந்த நிலையில் கமலஹாசன் தனது  ட்விட்டர்  பதிவில்:

அன்னையா அன்னையா என நான் அழைத்த பாட்டு அண்ணன்.

எண்ண இயலாப் பாடல்களில் என்னோடு இரண்டில்லாமல் கலந்த குரல்வண்ணன்.

எஸ்பிபிக்கு இன்று பிறந்த நாள். ஆயிரம் நினைவுகள் மனதில் ஓடுகின்றன. ‘உனக்கென்ன மேலே நின்றாய் ஓ எங்கள் பாலு. என  பகிர்ந்துள்ளார் கமல்ஹாசன்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்