விஜய்யை வீட்டுக்கே சென்று சந்தித்த கமல்ஹாசன் - நெகிழ்ச்சி பதிவு

By Vinoja May 16, 2026 03:18 PM GMT
Report

திமுக கூட்டணியில் நீடிக்கும் மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். த

மிழக முதலமைச்சர் விஜய்யை சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டுக்கு சென்று சந்தித்த கமல்ஹாசன், சுமார் 30 நிமிடங்கள் விஜயுடன் கலந்துரையாடலில் ஈடுப்பட்டுள்ளார்.

விஜய்யை வீட்டுக்கே சென்று சந்தித்த கமல்ஹாசன் - நெகிழ்ச்சி பதிவு | Kamal Haasan Meets Cm Vijay At Home

இந்த சந்திப்பின் போது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான பல்வேறு கனவுகள் தொடர்பில் விஜய் பேசியதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ்த் திரைப்படத் துறையின் வளர்ச்சிக்காக அரசின் ஆதரவும் அரவணைப்பும் அவசியம் என வலியுறுத்திய கமல்ஹாசன், திரைப்படத் துறையை மேம்படுத்தும் வகையில் 6 முக்கிய கோரிக்கைகளை முதல்வர் விஜய்யிடம் முன்வைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பு அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு தொடர்பில், கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிடுகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.

தமிழ்நாட்டை மேம்படுத்தும் பல கனவுகளை உற்சாகத்துடன் பகிர்ந்துகொண்டார். சந்திப்பின்போது அவர் காட்டிய பண்பும் அன்பும் நெகிழ்ச்சியளித்தது.

பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து வரும் தமிழ்த் திரைப்படத் துறைக்கு தமிழ்நாடு அரசின் ஆதரவும் அரவணைப்பும் வேண்டும் என்பதை வலியுறுத்தி 6 முக்கியமான கோரிக்கைகளை அவரிடம் கொடுத்திருக்கிறேன். நன்மை மலரட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.