மநீம. வேட்பாளராக போட்டியிட பிப் 21 முதல் விருப்ப மனு- ரூ25,000 கட்டணம்

actor politician vote
By Jon Feb 18, 2021 01:47 AM GMT
Report

தமிழகம் மற்றும் புதுவை சட்டசபை தேர்தல்களில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளராக போட்டியிட பிப்ரவரி 21- தேதி முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என அக்கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இந்த விருப்ப மனுக்களை ரூ25,000 கட்டணத்துடன் ஆன்லைனில் தாக்கல் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,2021 தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்களில் மக்கள் நீதி மய்யம் சார்பாகப் போட்டியிட பிப்ரவரி 21-ஆம் தேதி முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் ரூ25,000 கட்டணத்துடன் www.maiam.com மூலமாக ஆன்லைனில் விருப்ப மனுவை தாக்கல் செய்யலாம் என்றும் ப்ளாக்செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விருப்ப மனுக்கள் பெறப்படும் எனவும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இந்தியாவிலேயே ப்ளாக்செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ஒரே அரசியல் கட்சி மக்கள் நீதி மய்யம்தான் எனவும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.