''வாக்களிக்காமல் நழுவிய இந்திய அரசு.. துரோகத்தின் உச்சகட்டம் இது'' - கோபத்தில் கமல்ஹாசன்
இலங்கை இறுதி யுத்தத்தில் நடந்த மனித உரிமை மீறல் தொடர்பாக நியாயமான விசாரணை நடத்த வலியுறுத்தி ஐநாவில் மனித உரிமைகள் ஆணையம் தீர்மானம் நிறைவேற்றியது. இதற்காக நடத்தபட்ட வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை. 47 உறுப்பு நாடுகளில் 22 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாகவும், 11 நாடுகள் எதிராகவும் வாக்கு செலுத்தின.
ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் இலங்கை பற்றிய தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்காமல் புறக்கணித்தற்குப.சிதம்பம் , திருமாவளவன் போன்றோர் கண்டணம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மக்கள் நீதி மய்ய தலைவர்கமல்ஹாசன் தனது ட்வீட்டர் பதிவில் , ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தில் 'இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள்' குறித்து கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கைக்கு எதிராக வாக்களிக்காமல் நழுவி இருக்கிறது இந்திய அரசு.
தமிழுக்கும் தமிழர்க்கும் மத்தியஅரசு இதுவரை செய்து வந்த துரோகத்தின் உச்சகட்டம் இது'என மக்கள் நிதி மய்யம் கமல்ஹாசன் தனது ட்வீட்டர் பதிவில் கூறியுள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தில் ’இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள்’ குறித்து கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கைக்கு எதிராக வாக்களிக்காமல் நழுவி இருக்கிறது இந்திய அரசு. தமிழுக்கும் தமிழர்க்கும் மத்தியஅரசு இதுவரை செய்து வந்த துரோகத்தின் உச்சகட்டம் இது.
— Kamal Haasan (@ikamalhaasan) March 25, 2021