கமல்ஹாசனின் ஹெலிகாப்டர் பிரச்சாரம் திடீர் ரத்து

election kamal helicopter mnm
By Jon Mar 18, 2021 12:35 PM GMT
Report

உடுமலைக்கு பிரச்சாரத்திற்காக ஹெலிகாப்டர் மூலம் சென்ற கமல் ஹசன் பிரச்சாரத்தை திடீரென ரத்து செய்தார். உடுமலைக்கு ஹெலிகாப்டரில் வந்த மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் போதிய அளவில் கூட்டம் இல்லாததால் பரப்புரையை ரத்து செய்து புறப்பட்டதால் அங்கு காத்திருந்த வேட்பாளர் மற்றும் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை மடத்துக்குளம் பகுதிகளில், பிரச்சாரம் மற்றும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்க மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் ஹெலிகாப்டரில் வருகை புரிந்தார். ஜெயலலிதாவுக்கு பின் உடுமலை பகுதிக்கு ஹெலிகாப்டரில் பிரச்சாரத்துக்கு வந்தவர் கமல்ஹாசன் தான்.

இதை தொடர்ந்து மடத்துக்குளம் பகுதிக்கு பிரச்சார செய்ய சென்ற கமல்ஹாசன், பொதுமக்கள் கூட்டம் இல்லாததால் ஏமாற்றமடைந்து வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்ததோடு பிரச்சாரத்தை முடித்து கொண்டார். அதன்பின் உடுமலை பகுதிக்கு திரும்பினார். அங்கும் மக்கள் கூட்டம் குறைவாக இருந்தால் கடுப்பான கமல், பிரச்சாரம் செய்யாமலேயே ஹெலிகாப்டரில் பறந்து சென்றார்.