கமல்ஹாசனும் நானும் மிகவும் நெருங்கிய நண்பர்கள்- சீதாராம் யெச்சூரி பேச்சு
கமல்ஹாசன் என்னுடைய நெருங்கிய நண்பன்தான். ஆனாலும், தமிழகத்தைப் பொறுத்த வரையில் மூன்றாவது அணி வலிமையாக இருக்க முடியாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்திருக்கிறார். சேலம் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார கூட்டம் நடந்தது. அப்போது அக்கூட்டத்தில் சீதாராம் யெச்சூரி கலந்து கொண்டு பேசினார்.
திமுக கூட்டணியில் சிபிஎம் கட்சிக்கு ஒற்றை எண்ணிக்கையில் தொகுதிகள் கொடுக்கப்படுவதாக செய்தியாளர்கள் எழுப்பினார்கள். அப்போது அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதலளித்து பேசிய யெச்சூரி, திமுக தரப்பில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வந்துக் கொண்டிருக்கிறது. விரைவில் சுமுக தீர்வு கிட்டும். 'கமல்ஹாசனும், நானும் நெருங்கிய நண்பர்தான்.
ஆனாலும், தமிழகத்தைப் பொறுத்தவரையில் மூன்றாவது அணி வலிமையாக இருக்க முடியாது. திமுக தலைமையிலான கூட்டணி வலிமைமிக்கதாக இருக்கிறது. பாஜகவை திமுக கூட்டணி திறம்பட எதிர்கொள்ளும்.

80 வயதிற்கும் மேற்பட்டோர் தேர்தலில் தபால் வாக்கு அளிக்கலாம். தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு குறித்து புகார் அளித்திருக்கிறோம். 80 வயது மதிக்கத்தக்கவர்கள் மட்டும்தான் தபால் வாக்கு அளிப்பார்கள் என்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். அவர்கள் ஓட்டை வேறு யாரும் போடக்கூடாது.
மேற்கு வங்கத்தில், 8 கட்டமாக தேர்தல் நடைபெறுவது எதற்கு? என்று கேள்வி எழுப்பிய சீதாராம் யெச்சூரி தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் மேற்கு வங்கத்தில் பாஜக சதி செய்வதாக எங்களுக்கு சந்தேகம் இருக்கின்றது என்றார்.