மகள் வயதுள்ள பிரபல தொகுப்பாளினிக்கு முத்தம் கொடுத்த கமல்.... - வெளியான புகைப்படம்...! ரசிகர்கள் ஷாக்...!

Kamal Haasan Dhivyadharshini
By Nandhini Jan 03, 2023 04:59 PM GMT
Report

நடிகர் கமல்ஹாசன்

தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் கமல் ஹாசன். இவர் தற்போது பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அன்று முதல் இன்று வரை இவரது ரசிகர்கள் கமல்ஹாசனை ‘உலக நாயகன்’ என்று வர்ணித்து அழைத்து வருகின்றனர்.

இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில் கமல்ஹாசனுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஆனால், நடிப்பிற்கு மட்டுமன்றி முத்தத்திற்கும் பேர் போன நடிகரும் கமல் ஹாசன்தான். இவர் நடிக்கும் படங்களில் கதாநாயகிகளுடன் நெருக்கமாக நடிக்கும் காட்சிகள் பல சர்ச்சையில் சிக்கிவிடும்.

kamal-haasan-dhivyadharshini-kissing-viral-photo

டிடி என்ற திவ்யதர்ஷினி

சின்னத்திரையில் அதிகப்படியான ரசிகர்களைக் கொண்டவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் விஜய் டிவியில் காஃபி வித் டிடி என்ற நிகழ்சிக்கு தொகுப்பாளராக பணியாற்றியவர். இவரின் நிகழ்ச்சிகளில் கலகல கலாய்ப்பும், டைமிங் காமெடிக்கும் பஞ்சமே இருக்காது. இதனால், இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. 

தொகுப்பாளினிக்கு முத்தம் கொடுத்த கமல்

இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் தற்போது தீயாய் பரவி வருகிறது.

அந்த புகைப்படத்தில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'நீங்களும் வெல்லலாம் நூறு கோடி' என்ற நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்றுக்கொண்டார். அப்போது அந்த நிகழ்ச்சியில் வந்த விஜய் டிவியின் தொகுப்பாளினியான டிடி என்கிற திவ்யதர்ஷினி, கமல் ஹாசனை சந்திக்க வந்தார்.

அப்போது, கமல் ஹாசனிடம் கேள்வி கேட்டு முடித்தவுடன் தனக்கு கமல் ஹாசன் ஒரு முத்தம் கொடுக்க வேண்டும் அது தனது ஆசை என்று டிடி ஓப்பனாக கேட்டுள்ளார். அப்போது, உடனடியாக தொகுப்பாளினி டிடியை இறுக்கமாக கட்டியணைத்த கமல்ஹாசன் அவர் கன்னத்தில் நச்சென ஒரு முத்தமிட்டார்.

தற்போது அந்த காட்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.   

kamal-haasan-dhivyadharshini-kissing-viral-photo