மக்கள் நீதி மய்ய கட்சி மாவட்ட செயலாளர்களுடன் கமல்ஹாசன் ஆலோசனை
Kamal Haasan
Makkal Needhi Maiam
By Thahir
2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுப்பது தொடர்பாக கமல்ஹாசன் கருத்து கேட்பு கூட்டம் நடத்தினார்.
கமல்ஹாசன் ஆலோசனை
நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளுடன் அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை அண்ணா நகரில் நடைபெறும் ஆலோசனையில் மக்கள் நீதி மய்யம் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், 2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுப்பது தொடர்பாக கமல்ஹாசன் கருத்து கேட்டு வருகிறார்.