ஆம்புலன்ஸ் அனுப்பி சதிசெய்கின்றனர் கடுப்பான கமல்ஹாசன்
திருச்சியில் நடைபெற்ற திமுகவின் பிரம்மாண்ட பொது கூட்டத்தில் பேசிய நேற்று பேசிய மு.க. ஸ்டாலின்.குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என கூறினார். இதுதான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்த அறிவிப்பை நாங்கள் தான் முதலில் அறிவித்தோம் என மக்கள் நீதி மய்யம் கூறி வருகிறது .
மேலும்,திமுக தங்களைப் பார்த்து காப்பி அடித்து வாக்குறுதி கொடுப்பதாக அக்கட்சியைச் சேர்ந்த ஸ்ரீபிரியா குற்றம்சாட்டிய நிலையில். தற்போது இக்கருத்தை அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன் வழிமொழிந்திருக்கிறார். சென்னையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் கலந்துகொண்டு பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பெண்களின் நலன் குறித்த நிறைய திட்டங்கள் எங்களிடம் உள்ளது.
அதை அறிவித்தாலும் காப்பி அடிப்பார்கள். புலியை அடித்து துரத்திய வரலாறு கொண்ட பெண்கள், வாக்குக்குப் பணம் கொடுப்போரையும் அடித்து துரத்த வேண்டும் என்றார்.
அதுமட்டும் அல்லாமல் தனது தேர்தல் பிரச்சாரத்தை கெடுப்பதற்காகவே மக்களிடம் உரையாற்றும்போது ஆம்புலனஸ் அனுப்புவதாக குற்றம் சாட்டினார்.