மியாவ்.. பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது : பி டீம் கமல் போட்டு தாக்கும் ஜெயக்குமார்
ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ள நிலையில் பூனைக்குடி வெளியே வந்துவிட்டதாக முன்னள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
கமல்ஹாசன் ஆதரவு
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27 ஆம் தேதி இடைத்தேர்தல் வர உள்ளதால் தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகள் களத்தில் இறங்கியுள்ளது. திமுகவில் கூட்டணியாக களத்தில் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ் இளங்ல்கோவன் போட்டியிடுகின்றார். கூட்டணி கட்சித்தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்ட ஈவிகேஎஸ் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கோரினார் அவருக்கு கமல்ஹாசன் ஆதரவு தருவதாக அறிவித்தார்.
ஜெயக்குமார் கிண்டல்
இது குறித்து முன்னாள் அமைச்சர்ஜெயக்குமார் கூறுகையில் எத்தனை பேர் திமுகவிற்கு ஆதரவு கொடுத்தாலும் மக்கள் புரட்சிட்யை தடுக்க முடியாது எனக் கூறினார்.
மேலும் காங்கிரஸ் கட்சிக்கு கமல் தற்போது ஆதரவு கொடுப்பதன் மூலமாக பூனைக்குடி வெளியே வந்துவிட்டது என்றும் இதன் மூலம் திமுகவின் பி டீமாக கமல்ஹாசன் செயல்படுவதாக ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.