ஒற்றைக்காலில் பிரச்சாரம் செய்யும் கமல்ஹாசன்! ஏன் தெரியுமா?

kamal mnm akshara haasan
By Jon Apr 01, 2021 11:56 AM GMT
Report

கால் வலியுடன் நீண்ட நேரம் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்யும் புகைப்படத்தை நடிகை அக்ஷராஹாசன் பகிர்ந்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்துகட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்று மக்கள் நீதிமய்ய கட்சி தலைவர் நடிகர் கமலஹாசன் பிரச்சாரம் மேற்கொண்ட போது மைக் வேலை செய்யாததால் தன் கையில் வைத்திருந்த டார்ச் லைட் டை வாகனத்தில் இருந்த நபர் மீது தூக்கி எறிந்ததாக செய்திகள் வெளியாகின.

இந்த சம்பவத்திற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் நடிகை அக்ஷராஹாசன் தனது ட்விட்டர் பதிவில் : கால் வலியுடன் நீண்ட நேரம் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்யும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  

மேலும், தனது பதிவில் எனது தந்தை மிகசிறந்த போராளி என கூறியுள்ளார்.