அடேங்கப்பா... வெளியான சில மணி நேரத்தில் மாபெரும் சாதனை படைத்த காமல்ஹாசனின் ‘பத்தல பத்தல’ பாடல்
‘மாநகரம் ’படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அடியெடுத்து வைத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
இவரின் முதல் படமே மாஸ் ஹிட்டடித்தது. இதனையடுத்து, ‘கைதி’ படத்தை இயக்கினார். அப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தனது 3-வது படத்திலேயே தளபதி விஜய்யுடன் கைக்கோர்த்தார். ‘மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ்முன்னணி இயக்குநர்கள் வரிசையில் உயர்ந்து நின்றார்.
தற்போது, நடிகர் கமல்ஹாசனை வைத்து ‘விக்ரம்’ படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், நரேன், ‘பிக்பாஸ்’ ஷிவானி உள்ளிட்டோர் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஜூன் 3ம் தேதி ‘விக்ரம்’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
இந்நிலையில், படத்தின் இசை மற்றும் டிரெய்லரை வரும் மே 15-ம் தேதி வெளியாகும் என படக்குழு ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து தற்போது படத்திற்கான முதல் பாடல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியானது.
‘பத்தல பத்தல’ பாடலின் போஸ்டரை நேற்று வெளியிட்ட படக்குழு கமல் குரலில் பாடியுள்ள ‘பத்தல... பத்தல...’ பாடலை ரிலீஸ் செய்தது.
‘விக்ரம்’ திரைப்படத்தில் கமல்ஹாசன் எழுதி பாடியுள்ள ‘பத்தல.. பத்தல...’ லிரிக் வீடியோ, 8.8 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்று அசத்தியுள்ளது. ரசிர்கள் வரவேற்பைப் பெற்று இப்பாடல் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan
