கமல்ஹாசன் நண்பர் வீட்டில் ரூ. 8 கோடி சிக்கியது: அதிர்ச்சியில் கட்சியினர்

house kamal party friend mnm
By Jon Mar 18, 2021 12:46 PM GMT
Report

மக்கள் நீதி மய்யத்தின் பொருளாளர் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில் ரூ.8கோடி சிக்கியுள்ளது அந்த கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நீதி மையம் கட்சியின் மாநில பொருளாளர் சந்திரசேகரன். திருப்பூரின் தொழிலதிபர்களில் முக்கியமானவர்.

இந்த நிலையில், அவரது வீடு மற்றும் அலுவலகம் ,உறவினர்களின் வீடு ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர் .

கமல்ஹாசன் நண்பர் வீட்டில் ரூ. 8 கோடி சிக்கியது: அதிர்ச்சியில் கட்சியினர் | Kamal Friend House Crore Trapped Parties Shock

 திருப்பூர் லட்சுமி நகரில் உள்ள அனிதா டெக்ஸ்ட்காட் பின்னலாடை நிறுவனத்தில் அதிகாரிகள் சோதனை செய்ததில் கணக்கில் வராத 8 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ளது. அனிதா ஹெல்த்கேர் என்ற நிறுவனத்தை நடத்தி வரும் சந்திரசேகரன் மருத்துவ உபகரணங்களை தயார் செய்து வருகிறார்.

அதேபோல் கொரோனா கவச ஆடைகள் ,முகக் கவசங்கள் ஆகியவற்றை தமிழக அரசுக்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்கி வருகிறார். மக்கள் நீதி மய்யத்தின் மாநில செயற்குழு உறுப்பினர், ராஜ்கமல் நிறுவனத்தில் கமலுடன் தொழில் கூட்டாளியாகவும் உள்ளார்.

கமல்ஹாசன் நண்பர் வீட்டில் ரூ. 8 கோடி சிக்கியது: அதிர்ச்சியில் கட்சியினர் | Kamal Friend House Crore Trapped Parties Shock

ஊழல் செய்யும் திராவிட கட்சிகளை வேரறுப்போம் என முழங்கி வருகிறார் கமல் ஹாசன் . ஆனால், அவரது கட்சி நிர்வாகியும், கூட்டாளியுமான சந்திரகேரன் வீட்டில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் சிக்கியிருப்பது அந்த கட்சியினரிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.