நடிகர் கமல்ஹாசனின் நண்பர் மரணம்

love screenplay french
By Jon 2 ஆண்டுகள் முன்

நடிகர் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரும், எழுத்தாளருமான ஜான் கிளாட் கேரியார் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 90. உலகின் முன்னணி எழுத்தாளர்களில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜான் கிளாட் கேரியார் ஒருவர். கடந்த சில நாட்களாக உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

இந்நிலையில் அவர் உடல்நலக்குறைவால் ஜான் கிளாட் கேரியார் இன்று காலமானார். இதனையடுத்து அவருக்கு உலகம் முழுவதும் உள்ள எழுத்தாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது டுட்டரில் கூறியிருப்பதாவது ஜான் கிளாட் கேரியார் மரணம் குறித்து பதிவிட்டுள்ளார். அதில், தனது 90 ஆவது வயதில் அடியெடுத்து வைத்த உலகின், ஃபிரான்ஸ் நாட்டின், மிக முக்கிய எழுத்தாளரும், என் நண்பருமான ஜான் கிளாட் கேரியார் இன்று காலமானார்.

அவர் எழுத்துக்களும் மனித நேயமும் அவர் தொட்ட மனங்களால் தொடர்ந்து வாழும்' என்று பதிவிட்டுள்ளார். கமல்ஹாசனின் இந்த ட்விட்டை பின்தொடர்ந்து, பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.