உங்களால்தான் சினிமா நட்சத்திரமானேன் இப்போது சிறு விளக்காக மாற ஆசைப்படுகிறேன் – கமல்ஹாசன்
கோவை மாவட்டம் மசக்காளிப்பாளையம் பகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டார். கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன். உங்கள் தயவினால் தான் நான் சினிமா நட்சத்திரமானேன்.
இப்போது உங்கள் ஒவ்வொருவருக்கும் சிறு விளக்காக மாற ஆசைப்படுகிறேன். அந்த விளக்கை ஏற்றி வையுங்கள். எனது விளக்கை அணையாமல் நீங்கள் தான் பாதுகாக்க வேண்டும்.
இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்ற திட்டத்தை ஆசியாவில் வேறு எந்த கட்சியும் அறிவிக்கவில்லை.
இந்த திட்டத்தை அறிவித்த போது, கொக்கரித்து சிரித்தவர்கள், தற்போது ஓய்ந்து போய் வேடிக்கை பார்க்கிறார்கள்.
ஒவ்வொரு வீடுகளுக்கும் கணினி வழங்கப்படும். இது இலவசம் அல்ல. அது உங்கள் சொத்து. அரசின் சொத்து. ஊர் கூடி தேர் இழுத்தால் நாளை நமதேஎன கூறினார்.