17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியாகும் உலகநாயகனின் படம்

kamal-flim-cinima-realse-tamilnadu-actor
By Jon Jan 11, 2021 10:17 AM GMT
Report

17 ஆண்டுகளுக்குப் பிறகு ஓடிடி யில் வெளியாகும் உலகநாயகனின் படம். கமல்ஹாசன் நடித்து 2004 ஜனவரியில் திரைக்கு வந்த படம் விருமாண்டி. இதில் நாயகியாக அபிராமி மற்றும் பசுபதி, நெப்போலியன் ஆகியோரும் நடித்து இருந்தனர்.

படத்துக்கு முதலில் வேறு பெயர் வைத்து எதிர்ப்பு காரணமாக விருமாண்டி என்று மாற்றினர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. வசூலும் குவித்தது.

மேலும் இந்த படத்தின் கதை தொடர்பாக பல்வேறு சர்ச்சைகளும் கிளம்பின. இந்த நிலையில் இந்த திரைப்படம் மீண்டும் 17 வருடத்திற்குப் பிறகு விருமாண்டி திரைப்படம் வருகிற ஜனவரி 14ம் தேதி ஓடிடி தலத்தில் வெளியாகவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டன.

இது உலக நாயகனின் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.