இந்த தொகுதியில் போட்டியிடுகிறாரா கமல்?
மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன் எந்த தொகுதியில் போட்டியிடுவது என தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் இந்த நிலையில் கமல்ஹாசன் ஆலந்தூர் தொகுதியில் கமலஹாசன் போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கமல் ஹாசன் ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட வேண்டுமா? உங்கள் கருத்து என்ன? என்று போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
இந்தத் தேர்தலில் கமல் ஹாசன் மயிலாப்பூர் திநகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏதேனும் ஒன்றில் போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது . இதனால் மக்களின் கருத்தை கேட்கும் விதமாக எந்த தொகுதியில் கமல் ஹாசன் போட்டியிடுவது குறித்து உங்கள் கருத்து என்ன ?என்பதை கேட்கும் விதமாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
அந்த போஸ்டர்களில் தொலைபேசி எண்ணும் பதிவிடப்பட்டுள்ளது. கமலுக்கு மக்களின் செல்வாக்கினை அறியவும் மக்களினை மனநிலையினை அறியவும் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டதாக கட்சியினர் கூறுகின்றனர்.
மயிலாப்பூர் ,தி,நகர் பகுதிகளில் இந்த போஸ்டர்கள் அதிக அளவில் இல்லை, ஆலந்தூர் பகுதியில் மட்டுமே அதிகளவில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு மக்களின் கருத்துக்களை தீவிரமாக அறிந்து வருகின்றனர். இதனால் கமல் ஹாசன் ஆலந்தூரில் போட்டியிடலாம் என கூறப்படுகிறது.