சிறு துளி அமைப்பினரை சந்தித்த கமல்- வரும் நாட்களில் தண்ணீரை சேமிப்பது குறித்து ஆலோசனை
தண்ணீரை சேமிக்கவும், தண்ணீர் பற்றிய விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்தி வரும் சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலரை, மக்கள் நீதி மய்யத்தின் கட்சியின் தலைவர் கமலஹாசன் சந்தித்து கலந்துரையாடினார். சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியில் களத்தில் இறங்கியுள்ளார். இந்நிலையில் உக்கடம் ஜி.எம்.நகர் பகுதியில் உள்ள சிறு துளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகனை சந்தித்து பேசினார்.
அப்போது அவர், வனிதா மோகனிடம் தண்ணீர் குறித்த அனைத்து தகவல்களையும் கேட்டு அறிந்து கொண்டார். கோவை மாவட்டத்திற்க்கு வருகிற நீர் வழி பாதை, அதில் மக்கள் ஆக்கிரமிப்பு இடங்கள், தற்போதய தண்ணீர் அளவு, நீர் வழி பாதையின் அளவு குறித்து கலந்து ஆலோசனை செய்தார்.

மேலும் கோவை மாநகரில் உள்ள குளங்களை சீர்படுத்துதல், குளங்களை தூர்வாருதல் மற்றும் இனி வருகிற நாட்களில் கோவை மக்களின் தேவைக்காக தண்ணீரை சேமித்து வைப்பது குறித்து அவர் கலந்துரையாடினார். சிறு துளி அமைப்பினர், அமைப்பு முன்னேற்றத்திற்குத் தேவையான அனைத்து கோரிக்கைகளையும், அதன் பணிகள் குறித்தான தகவல்களையும், கோரிக்கைகளாக தெரிவித்தார்கள்.
கோவை தெற்கு தொகுதியில் தான் வெற்றி பெற்றால் சிறு துளி அமைப்புடன் இணைந்து கோவையில் உள்ள நீர் வளங்களை மேம்படுத்த நிச்சயம் பாடுபடுவேன் என கமல் வாக்குறுதி அளித்தார்.