Sunday, Feb 23, 2025

கமல் கார் கொடுக்கவில்லை : பெண் ஓட்டுநர் ஷர்மிளாவின் தந்தை பரபரப்பு பேட்டி

By Irumporai 2 years ago
Report

பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு, கமல்ஹாசன் கார் கொடுக்கவில்லை என ஷர்மிளா தந்தை கூறியுள்ளார்.

பெண் ஓட்டுநர் ஷர்மிளா

கோவை தனியார் நிறுவனத்தில் பேருந்து ஓட்டுநராக பணிபுரியும் முதல் பெண் ஓட்டுநரான ஷர்மிளா, கடந்த சில தினங்களுக்கு முன் பேருந்தில் திமுக எம்.பி கனிமொழி பயணித்த தினத்தன்று பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பயணசீட்டு கொடுப்பதில் தகராறு ஏற்பட்டதால் பணிநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து ஷர்மிளாவுக்கு கமல்ஹாசன் கார் கொடுத்ததாக செய்திகள் வந்தன ,இந்த நிலையில் ஷர்மிளாவின் தந்தை இது குறித்து விளக்கமளித்துள்ளார்.

கமல் கார் கொடுக்கவில்லை : பெண் ஓட்டுநர் ஷர்மிளாவின் தந்தை பரபரப்பு பேட்டி | Kamal Did Not Give The Car Sharmilas Father

 ஷர்மிளாவின் தந்தை விளக்கம்

கமல் சார் கார் கொடுக்கவில்லை, கார் வாங்குமாறு அட்வான்ஸ் பணமாக 3 லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கினார் என்றும் கூறினார்.

மேலும் ஷர்மிளாவிடம் சோர்வடையாமல் தைரியமாக இருக்கும்படியும், உங்களைப்போல் நிறைய பெண்கள் முன்னுக்கு வர வேண்டும் எனவும் கூறியுள்ளதாக அவரது தந்தை தெரிவித்தார்.