எம்ஜிஆர் முதன்முதலாக போட்டியிட்ட தொகுதியில் களமிறங்கும் கமல்ஹாசன்? வெற்றி நிச்சயமா?
சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளரான கமல்ஹாசன் ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த பகுதிகளை உள்ளடக்கியது ஆலந்தூர் தொகுதி.
1967ம் ஆண்டு பரங்கிமலை தொகுதியாக உருவாக்கப்பட்ட போது, திமுக சார்பில் எம்ஜிஆர் முதன்முறையாக போட்டியிட்டார். அத்தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரைவிட 27,674 வாக்குகளை கூடுதலாகப்பெற்று முதன்முறையாக சட்டப்பேரவைக்குள் நுழைந்தார்.
இதனைத் தொடர்ந்து, 1971-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்ட எம்.ஜி.ராமச்சந்திரன், 61 .11 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்.
1977-ம் ஆண்டு முதல் பரங்கிமலை என்பது ஆலந்தூர் என்று பெயர் மாற்றம் பெற்றது.
இந்த தொகுதியிலேயே கமல்ஹாசன் முதன்முறையாக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.