தேர்தலில் வெற்றிபெற்றால் தொகுதி பக்கம் கமல் வரமாட்டாரா? விளக்கமளித்த சரத்குமார்
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் கோவையில் வெற்றி பெற்றால் அவர் தொகுதிக்கு வரமாட்டார் என்று அவரை விமர்சிப்பது வேடிக்கையாக உள்ளது என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று கோவையில் பிரச்சாரம் மேற்கொண்டார் இதனைத் தொடர்ந்து பந்தயசாலை பகுதியில் உள்ள தனியார் உணவக அரங்கில் செய்தியாளர்களை சந்தித்த மகேந்திரன் மற்றும் சரத்குமார் ஆகியோர் கூறுகையில் வெற்றிக்கான முயற்சிகளை மேற்கொண்டு உள்ளோம் எனவும், மக்கள் நினைத்தால் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் வெற்றி பெற்றால் தொகுதி பக்கம் வரமாட்டார் சென்னை சென்றுவிடுவார் என்று விமர்சிக்கின்றனர். தென்காசியில் வேட்பாளராக நான் நின்றபோது என்னையும் அதையே கூறினார்கள்.
இதனை நான் வேடிக்கையாக பார்க்கிறேன் என தெரிவித்தார்.
வேலைசெய்பவர்கள் எங்கிருந்தாலும் செய்யலாம் எனவும், தேர்தல் நேரத்தில் வருமான வரிசோதனை என்பது ஒருவரை டார்க்கெட் செய்வது போல் தோன்றுகிறது என தெரிவித்துள்ளார்.