ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த கமல்: ஒற்றை வரியில் அசிங்கப்படுத்திய பிரபல நடிகை
இந்தியாவின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு நேற்று அறிவிக்கப்பட்டது. இவ்விருது அறிவிக்கப்பட்டதும் பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட பல அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.
நடிகர் ரஜினிகாந்தும், மக்களுக்கு நன்றி தெரிவித்து உருக்கமான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் சக நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தன்னுடைய வாழ்த்து செய்தியில், உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது உச்ச நட்சத்திரமும் என் மனதிற்கு இனிய நண்பருமான ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது.
திரையில் தோன்றுவதன் மூலமே பெரும் வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு இந்த விருது 100% பொருத்தம் என கூறினார். இதை குறிப்பிட்டு பிரபல சீரியல் நடிகையான சரண்யா, இதற்கு வாழ்த்து சொல்லாமலே இருக்கலாமே என பதிவிட்டிருந்தார். இவர் நெஞ்சம் மறப்பதில்லை, ஆயுத எழுத்த, ரன் போன்ற சீரியல்களில் நடித்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.