பேரன்பை பொழிந்த அண்ணனை இழந்துவிட்டேன் - இயக்குநர் ஜி.என்.ரங்கராஜன் மறைவுக்கு கமல் இரங்கல்

Kamalhassan Gnrangarajan rip gnrangarajan
By Petchi Avudaiappan Jun 03, 2021 10:26 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

இயக்குநர் ஜி.என். ரங்கராஜன் மறைவிற்கு மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழில் கல்யாண ராமன், கடல் மீன்கள், மீண்டும் கோகிலா மற்றும் மகராசன் போன்ற வெற்றிப்படங்களை இயக்கியவர் ஜி.என்.ரங்கராஜன். 90 வயதான இவர் இன்று காலை மாரடைப்பால் காலமானார்.

அவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வரும் நிலையில் மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசனும் இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் என் மீது கொண்ட மாறாத அன்பால் தான் கட்டிய வீட்டிற்கு "கமல் இல்லம்" என பெயர் வைத்தவர் இயக்குனர் ஜி.என்.ரங்கராஜன் என தெரிவித்துள்ளார்.

மேலும் நிபந்தனையற்ற தூய பேரன்பினை பொழிந்த ஓர் அண்ணனை இழந்துவிட்டேன் என்றும், அவரது குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருடைய மகன் ஜி.என்.ஆர் குமரவேலனும் திரைப்பட இயக்குநராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.