“திமுக சாயம் வெளுத்துவிட்டது” - கொந்தளித்த கமல்ஹாசன்

mkstalin kamalhassan makkalneedhimaiam villagecouncilmeeting
By Petchi Avudaiappan Aug 12, 2021 01:35 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

 தமிழகத்தில் கிராம சபை கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டாம் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அரசின் இந்த அறிவிப்புக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் கண்டம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கொரானாவில் தேர்தல் நடக்கும், வாக்கு எண்ணிக்கை நடக்கும், பதவி ஏற்பு விழா நடக்கும், சட்டமன்றம் நடக்கும், உள்ளாட்சித் தேர்தலுக்கான முஸ்தீபுகள் நடக்கும். ஆனால், கிராம சபை மட்டும் நடக்காது. அதிமுகவிற்கும், திமுகவிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

முந்தைய ஆட்சியில் கிராம சபை நடத்த தொடுத்த வழக்கை திமுக ரகசியமாக வாபஸ் பெற்றுக் கொண்டபோதே இந்த அரசும் கிராம சபைகளைக் கண்டு அஞ்சுகிறது என்பதைப் புரிந்துகொண்டோம். திமுகவின் சாயம் வெளுத்துவிட்டது” என காட்டமாக பதிவிட்டுள்ளார்.