"இசைக்கு இளைஞர் இளையராஜா"... கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து...

Ilayaraja HBDIlayaraja
By Petchi Avudaiappan Jun 02, 2021 09:53 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

இசையமைப்பாளர் இளையராஜா பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமலஹாசன் ட்விட்டர் மூலம் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

இசைஞானி இளையராஜா இன்று தனது 78வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இளையராஜாவின் இசை வரலாறு குறித்தும், தங்கள் வாழ்க்கையில் இசைஞானியின் பங்கு என்பது குறித்து பலரும் தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன் ட்விட்டரில் இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இசைக்கு இளைஞர் இளையராஜா.என் மனதுக்குக் கிளைஞர்.உணர்வுகளில் உறவாய் இருப்பவர்.சம்பவங்களை ஸ்வரங்களாய் மொழிபெயர்ப்பவர். பல கோடி மனங்களை கண்டக்ட் செய்யும் மேஸ்ட்ரோவிற்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்" எனக் கூறியுள்ளார்.