விக்ரம் படத்தின் 3-ம் பாகம் விரைவில்?..இந்தியன் 2 படத்தின் நிலை இதுதானா ? - சூப்பர் அப்டேட்டை சொன்ன ஆண்டவர்!

Kamal Haasan Lokesh Kanagaraj Vikram Movie
By Swetha Subash May 26, 2022 06:30 AM GMT
Swetha Subash

Swetha Subash

in சினிமா
Report

மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர்கள் கமல் ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் ஃபஹத் ஃபாசில் வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். 

இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளரான அனிருத் இசை அமைத்துள்ளார். இதுவரை படத்தில் இருந்து வெளியிடப்பட்ட அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

விக்ரம் படத்தின் 3-ம் பாகம் விரைவில்?..இந்தியன் 2 படத்தின் நிலை இதுதானா ? - சூப்பர் அப்டேட்டை சொன்ன ஆண்டவர்! | Kamal Answers About Indian 2 Movie To Reporters

வருகிர ஜூன் 3-ம் தேதி வெளியாகும் விக்ரம் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் படுபிஸியாக இருக்கிறார் கமல்ஹாசன்.

அந்த வகையில் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கமலஹாசன் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய கமல்ஹாசன், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு என்னுடைய திரைப்படம் வெளியாகிறது. இதற்கு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார். மேலும் ஒரு நல்ல திரைப்படத்தை எடுக்க வேண்டும் என்று நினைத்தோம், அதை ஒரு அளவுக்கு செய்திருக்கிறோம் எனவும் கூறினார்.

விக்ரம் படத்தின் 3-ம் பாகம் விரைவில்?..இந்தியன் 2 படத்தின் நிலை இதுதானா ? - சூப்பர் அப்டேட்டை சொன்ன ஆண்டவர்! | Kamal Answers About Indian 2 Movie To Reporters

இதனை தொடர்ந்து அவரிடம் இந்தியன் 2 திரைப்படம் குறித்த கேள்வி எழுப்பபட்டது. இதற்கு பதிலளித்து பேசிய கமல்,  இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் தொடங்கும் என்றும் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

விக்ரம் 3 பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும்போது, லோகேஷ் கனகராஜ் தான் இது குறித்து முடிவு செய்ய வேண்டும் என கூறினார்.

மேலும், விக்ரம் 3-க்கும் லோகேஷ் கனகராஜ் தான் இயக்குநர் என்பதை தான் முடிவு செய்து விட்டேன் என்று மேடையிலேயே வெளிப்படையாக அறிவித்தார்.