கதவை உடைத்து பார்த்த போது என் அம்மா தூக்கில் பிணமாக தொங்கினாள்... - பிரபல நடிகை உருக்கம் - ரசிகர்கள் சோகம்

By Nandhini May 26, 2022 06:25 AM GMT
Report

தமிழ் சினிமாவில் சின்ன வயது முதல் நடித்து பிரபலமானவர் தான் கல்யாணி. இவர் சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்துள்ளார். மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ஆண்டாள் அழகர்’, ‘பிரிவோம் சந்திப்போம்’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார். மேலும் பல மேடை நிகழ்ச்சிகளில் தொகுப்பாளியாகவும் பணிபுரிந்துள்ளார்.

இதனையடுத்து, சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு குடும்பம், குழந்தை என்று செட்டிலாகி விட்டார்.

இந்நிலையில், கல்யாணி தனது இன்ஸ்டா பக்கத்தில் தன் தாயை குறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில்,

கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ம் தேதி அனைவரும் வருஷம் முடிய போகுதுனு சந்தோஷத்தில் இருந்திருப்பீர்கள். ஆனால் அன்று நான் சந்தித்த ஒரு விஷயம் என் வாழ்க்கையில் பெரிய துக்கத்தை ஏற்படுத்தியது. அந்த நாள் என் வாழ்வில் மிகவும் கொடூரமான நாளாக மாறியது.

என் அம்மாவுக்கு பக்கத்து வீட்டில்தான் நான் வசித்துக் கொண்டிருந்தேன். அன்று காலை அம்மா வீட்டிற்கு சென்றபோது அவரிடம் இருக்கும் வழக்கமான சந்தோஷம் அன்று அவரிடம் இல்லை. அவருக்கு ஜூஸ் கொடுத்துவிட்டு என் வீட்டிற்கு சென்றேன்.

பின்னர், என் அம்மாவுடன் சேர்ந்து செல்ல ஜிம்மிற்கு தயாரானேன். 20 நிமிடம் கழித்து திரும்பி வந்த நான், வாசலில் நின்று மணியை பலமுறை அடித்தேன். கதவு திறக்கவில்லை. ரொம்ப நேரமாக நின்றுக் கொண்டிருந்தேன். அதனால், எனக்கு சந்தேகம் வந்தது.

என்னமோ சரியில்லை என்று பயந்தேன். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, நாய்கள் சத்தமே இல்லை. அறைக்குள் ஓடிப் போய் பார்த்தபோது என் அம்மா தூக்கில் பிணமாகத் தொங்கிக் கொண்டிருந்தார்.

அப்பொழுது எனக்கு 23 வயது. செய்வதறியாது திகைத்து நின்றேன். மூச்சு முட்டியது. சட்டென்று அழுகை வரவில்லை. அன்று என் வாழ்க்கை மாறிவிட்டது.

என் அம்மா தான் எனக்கு சிறந்த தோழி. அவர் இல்லாத உலகை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. என் ஆத்மாவும் அன்றே இறந்ததுபோல் உணர்ந்தேன்.

என் அம்மா பல காலமாக கவலையில் இருந்தது அவர் டைரி மூலம் தெரிய வந்தது. அவர் மட்டும் எங்களிடம் சொல்லியிருந்தால். என் இறந்த பின், நம்பிக்கை இழந்து நானும் தற்கொலைக்கு முயன்சி செய்தேன்.

உதவி கேட்டு உள்ளூர் ஹெல்ப்லைன்களுக்கு போன் செய்தேன். ஆனால் யாரும் போனை எடுத்து பேசவில்லை. என் கணவர் என்னை கண்டுபிடித்து உதவி செய்தார். எனக்கு கிடைத்த உதவிகளால் இன்று நான் நலமாக உள்ளேன்.

ஹெல்ப்லைனில் யாரும் பேசாததால் உதவி கிடைக்காமல் பலர் இருக்கலாம். அதை மாற்ற நான் விரும்புகிறேன். உதவி கிடைக்காமல் யாரும் தன் தாயை இழக்கக் கூடாது. தேசிய தற்கொலை தடுப்பு ஹெல்ப்லைனான கிரண் குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ஆய்வின்படி 2023ம் ஆண்டு 500 மில்லியன் ஓடிடி பயனாளிகள் இந்தியாவில் இருப்பார்கள் என்பது தெரிய வந்துள்ளது.

24 மணிநேரமும் செயல்படும் மனநல ஆரோக்கிய ஹெல்ப்லைன் அனைத்து ஓடிடி பிளாட்ஃபார்ம்களிலும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

சம்பந்தப்பட்ட காட்சிகள் வரும்போது இந்த எண்களை சேர்த்தால், இல்லை காட்சி துவங்கும் முன்போ காட்டினால் மக்களுக்கு உதவியாக இருக்கும். என் கோரிக்கை பேப்பரில் கையெழுத்திடுங்கள் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

தற்போது கல்யாணி இந்த பதிவு சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கல்யாணியின் இந்த உருக்க பதிவை பார்த்த அவரது ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.