7-வது திருமணத்திற்கு ரெடியான கல்யாண ராணி - கம்பி எண்ண வைத்த 6-வது கணவர்

Tamil nadu Marriage
By Thahir 1 வாரம் முன்

7வது திருமணத்திற்கு தயாராகி மண மேடைக்கு வந்த கல்யாண ராணியை போலிசாரிடம் சிக்க வைத்துள்ளார் 6வது கணவர்.

கல்யாண ராணியி்ன் 6வது திருமணம்

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தனபால் (35) இவருக்கும் மதுரையைச் சேர்ந்த சந்தியா (26) என்பவருக்கும் கடந்த 7ம் தேதி திருமணம் நடந்துள்ளது.

இவர்களுக்கு மதுரையைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் தான் புரோக்கர் வேலை பார்த்து திருமணத்தை ஏற்பாடு செய்துள்ளார்.

திருமணத்தின் போது பெண் வீட்டின் தரப்பில் இருந்து பெண்ணின் அக்கா,மாமா ஆகிய 2 நபர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். இவர்களும், வரன் பார்த்து கொடுத்த புரோக்கரும் திருமணம் முடிந்த கையோடு ரூ.1.50 லட்சம் கமிஷனாக வாங்கி சென்றுள்ளனர்.

7-வது திருமணத்திற்கு ரெடியான கல்யாண ராணி - கம்பி எண்ண வைத்த 6-வது கணவர் | Kalyana Rani Ready For 7Th Marriage Police Arrest

இதனிடையே கடந்த 9ம் தேதி காலை தனபால் எழுந்து பார்த்த போது சந்தியாவை காணவில்லை.பீரோவில் வைத்திருந்த கல்யாண பட்டுப்புடவை, நகைகள், தான் கொண்டு வந்த துணிகளை எடுத்துக் கொண்டு சந்தியா மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

மடக்கி பிடித்த பொதுமக்கள் 

பின்னர் காவல்நிலையத்தில் தனது மனைவி காணவில்லை என்று புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் தான் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணத்துக்கு பெண் பார்த்த போது சந்தியாவின் போட்டோ வந்துள்ளது.

இதை பார்த்து அதிர்ந்து போன 6வது கணவரோ..தன்னை ஏமாற்றியவர்களை பிடிக்க திட்டமிட்டுள்ளார். பின்னர் புரோக்கரிடம் தொடர்பு கொண்ட தனபால் வேறஒரு மாப்பிள்ளைக்கு இந்த பெண் பிடித்துள்ளது.எனவே திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

உடனே ஒகே சொன்ன சந்தியாவை போனில் தொடர்பு கொண்டபடி நிச்சயம் செய்துள்ளனர். இந்த நிலையில் நேற்று ஈரோடு மாவட்டம் திருச்செங்கோட்டில் திருமணம் நடைபெற இருந்தது.

இதற்காக கல்யாண ராணி மணப்பெண்ணாக வந்தார் சந்தியா, அவருடன் புரோக்கர் , உறவினர் ஐய்யப்பன் ஆகியோரும் வந்துள்ளனர்.

அங்கு தனது 6வது கணவர் தனபால் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த சந்தியா தப்பி ஓட முயன்றுள்ளார். அவரை கையும், களவுமாக பிடித்த தனபால் மற்றும் உறவினர்கள் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சந்தியாவுக்கு தனபாலுடன் சேர்த்து இதுவரை 6 பேருடன் திருமணம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து சந்தியாவின் கூட்டாளிகள், மற்றும் புரோக்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர் போலீசார்.