கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் புதிய தலைவர் நியமனம்
சென்னை உள்பட இந்தியாவின் பல நகரங்களில் கிளைகளை வைத்திருக்கும் நகைக்கடை கல்யாண் ஜுவல்லர்ஸ் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் தலைவராக வினோத் ராய் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவர் முன்னாள் இந்திய தலைமை கணக்காயர் இருந்துள்ள நிலையில் கல்யாண் ஜுவல்லர்ஸ் மேனேஜிங் டைரக்டர் ஆக பிஎஸ் கல்யாணராமன் தொடர்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது முன்னாள் இந்திய தலைமை கணக்காயர் வினோத் ராய் நியமனத்தால் கல்யாண் ஜுவல்லர்ஸ் வியாபாரம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
உலகளாவிய நகை சந்தை மதிப்பானது 320 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது உலகப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் , ஒரு முக்கிய துறையாகவும் இருந்து வருகின்றது.
விலை மதிப்பற்ற நகைச் சந்தையில் தங்கம் மற்றும் வைரம் 50% பங்கு வகிக்கிறது. சீனா, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகியவை நகை சந்தையில் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில்.
தமிழகத்தின் பிரபலமான நகைக்கடையான கல்யாண் ஜூவல்லர்ஸ் மேனேஜிங் டைரக்டராக பிஎஸ் கல்யாணராமன் நியமிக்கப்பட்டுள்ளது நகைக்கடை வர்த்தகத்தில் எதிர்பார்பை அதிகரித்துள்ளது.