கோவையின் முதல் பெண் மேயரானார் கல்பனா ஆனந்தகுமார்
கோவை மாநகரின் முதல் பெண் மேயராக கல்பனா ஆனந்தகுமார் தேர்வு செய்யப்பட்டார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகரில் திமுக 96 இடங்களிலும், அதிமுக 3 இடங்களிலும், எஸ்.டி.பி.ஐ ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன.
வெற்றி பெற்ற உறுப்பினர்கள் கடந்த 2-ம் தேதி பதவியேற்றனர்.
தொடர்ந்து இன்று மேயரை தேர்வு செய்ய மறைமுக தேர்தல் நடந்தது. இதில் அதிமுக உறுப்பினர்களை தவிர 97 மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஒரு மனதாக கல்பனா ஆனந்தகுமாரை மேயராக தேர்வு செய்தனர்.
அதன்படி, கோவையின் முதல் பெண் மேயர் என்ற பெருமையை பெற்றுள்ளார் கல்பனா ஆனந்தகுமார்.
மேயராக தேர்வு செய்யப்பட்ட அவருக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி செங்கோல் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
iந்நிலையில், கோவை, வெள்ளலூர் பேரூராட்சியை அதிமுக கைப்பற்றிய நிலையில்,
மறைமுக தேர்தலுக்கு சென்ற அதிமுக உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் மீதி திமுக.,வினர் தாக்குதல் நடத்தியதால் பேரூராட்சி தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.