அதிகரிக்கும் கள்ளச்சாராய விற்பனை - சாராய ஊரல் அழிப்பு..!
ஊரடங்கால் டாஸ்மாக் கடைகள் மூடபட்டுள்ள நிலையில் ஜமுனாமரத்தூர் மலை கிராம காட்டுப்பகுதியில் நாளுக்கு நாள் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்து வருகிறது. தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
இதனால் மதுபிரியர்கள் அனைவரும் மது இன்றி தவித்து வருகின்றனர். இந்த ஊரடங்கால், கள்ளச்சாராய விற்பனை தலைதூக்கியுள்ளது. அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம், மேல்பட்டு வனச்சரக அலுவலர்களுக்கு மலைகிராம பகுதியில் கள்ளச்சாராயம் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த, வனவர்கள், வனக்காப்பாளர்கள் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக வைக்கப்பட்டிருந்த 1000 லிட்டர் கள்ளச்சாராய ஊரல், இரும்பு பேரல்கள் ஆகியவற்றை அழித்தனர்.