மதுரையில் களைக்கட்டியது சித்திரை திருவிழா - 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி - மகிழ்ச்சியில் மக்கள்
மதுரையில் மக்களுக்கு மிகவும் பிரசித்திப்பெற்ற விழா என்றால் அது சித்திரை திருவிழா தான்.
மதுரை மாவட்டத்தை சுற்றி லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வைகை ஆற்றில் ஒன்று திரண்டி கோலாகலமாக சித்திரை திருவிழாவை கொண்டாடி மகிழ்வார்கள்.
அந்த விழாவில் ஒன்று தான் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி.
இப்படி புகழ் வாய்ந்த மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கொரோனா தொற்று காரணமாக 2 வருடங்களாக பக்தர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டது.
பக்தர்கள் இல்லாமல் இந்த திருவிழா கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்றது. தமிழகத்தில், தற்போது கொரோனா தொற்று குறைந்து வருகிறது. எனவே, 2 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அரசு பக்தர்களுக்கு அனுமதி வழங்கி உள்ளது.
இதனால், பக்தர்கள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வெகுவிமர்சையாக இந்த ஆண்டு சித்திரை திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.