கலவரமான கள்ளக்குறிச்சி , 144 தடை உத்தரவு : மாவட்ட நிர்வாகம் தகவல்

By Irumporai Jul 17, 2022 09:31 AM GMT
Report

கள்ளக்குறிச்சி-சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நீதி கேட்டு மாணவர் அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கற்கள் வீச்சு

அப்போது திடீரென போலீசார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்க தொடங்கினர். தொடர்ந்து செருப்பு, கண்ணாடி பாட்டில் உள்ளிட்ட பொருட்களை கொண்டு போலீசார் மீது வீசி தாக்குதல் நடத்தினர்.

இதில் போலீசார் பலர் காயம் அடைந்தனர். தொடர்ந்து போலீசாரின் வானத்திற்கு தீ வைக்கப்பட்டது. தொடர்ந்து பள்ளியின் முகப்பின் மீது ஏறி நுழைவு வாயிலை உடைத்து உள்ளேன் போராட்டக்காரர்கள் நுழைந்தனர்.

போலீசார் துப்பாக்கி சூடு

பள்ளி வளாகத்தில் இருந்த பொருட்களை போராட்டக்காரர்கள் சூறையாடினர். இதனையடுத்து போராட்டக்காரர்களை கலைக்க வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

கலவரமான கள்ளக்குறிச்சி , 144 தடை உத்தரவு : மாவட்ட நிர்வாகம் தகவல் | Kallakurichi Student Suicide Issue 144

தற்போது பள்ளி வளாகத்தில் நுழைந்த போராட்டக்காரர்கள் பள்ளி வாகனங்களை சேதப்படுத்தியதுடன், அங்கிருந்த பேருந்துகளுக்கு தீ வைத்தனர். இதனால் அந்த பகுதி முழுவதும் பதட்டம் நிறைந்து காணப்பட்டது. 

144 தடை உத்தரவு

இந்த நிலையில்  கள்ளக்குறச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரிக்கக் கோரிய மனு உயர்நீதி மன்றத்தில் நாளை விசாரணை மாணவியின் தந்தை தொடர்ந்த வழக்கை நாளை விசாரிப்பதாக நீதிபதி அறிவித்துள்ள நிலையில் கள்ளக்குறிச்சி போராட்டம் நடைபெறும் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.