கள்ளக்குறிச்சி கலவரம் : தவறு செய்தவர்கள் சட்டத்தின் முன் தண்டிக்கப்படுவாரக்ள் - முதலமைச்சர் எச்சரிக்கை
தமிழ் நாடு விழா நாளில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் , இந்த விழாவில் கலந்து கொண்டு பேசுவது தனக்கு கிடைத்த பெருமை என்று கூறிய அவர் தமிழ் நாடுதான் தாய் நாடு கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி தமிழ் குடி என்று கூறினார்.
உயிர் தியாகம் செய்தும் தமிழ்நாடு என்ற பெயர் கிடைத்தது
அதே சமயம் ரத்தம் சிந்தியும் ,உயிர் தியாகம் செய்தும் தமிழ்நாடு என்ற பெயர் கிடைத்தது, திராவிடம் என்ன கிழித்தது என்று வாய் கிழியப் பேசுவோர் இதனை அறிய வேண்டும் தமிழ் நாடு என்று இம் மாநிலத்திற்கு பெயர் பெறவும், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைக்கவும் நாம் காரணம் என்று கூறினார்.
தமிழ் உணர்வை உண்டாக்கிய இயக்கம் திமுக
தமிழ் நாடு என்ற பெயருக்காக போராட வேண்டிய அவமானம் இருந்தது அந்த அவமானம் துடைக்கப்பட்ட நாள் ஜூலை 18 எனக் கூறிய முதலமைச்சர் தமிழ்,தமிழர் தமிழ்நாடு என்ற உணர்வை உண்டாக்கிய இயக்கம் திமுக என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
தமிழ்நாடு என அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18ம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படுகிறது;தமிழ்நாடு நாள் என்று சொன்னாலே ஒரு ஆற்றல் பிறக்கிறது.
இந்த விழாவில் பேசுவது எனக்கு கிடைத்த பெருமை என்றும் திமுக ஆட்சிக்கு வராமல் இருந்திருந்தால் இந்த மாநிலத்திற்கு தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்படாமலேயே போயிருக்கும் என கூறிய முதலமைச்சர்.
இந்தியாவின் மொத்த உள் நாட்டு உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு 9.2 சதவீதம் எனக் கூறினார். கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்
கள்ளக்குறிச்சி வன்முறை வேதனை
அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற இலக்கினை எடுத்து செல்லும் போது கள்ளக்குறிச்சி வன்முறை வேதனை தருகிறது.
இந்த சம்பவத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவாரக்ள்
சோகாமான சமபவத்தை பயன்படுத்தி சிலர் சட்ட விரோத செயலில் ஈடுபடுவது வளர்ச்சிக்கு எதிரானது
பள்ளிகள் ஒவ்வொரு மாணவர்களையும் தங்கள் சொந்த பிள்ளைகளாக கருதி பாதுகாக்க வேண்டும்
வன்முறையில் ஈடுபடுவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan