கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு
கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை அவரது பெற்றோர் இன்று காலை பெற்றுக்கொண்டனர். கடந்த 13-ந்தேதி விடுதியில் இருந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
பள்ளி நிர்வாக தரப்பில் ஸ்ரீமதி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர். ஆனால் இதை அவரது பெற்றோர் ஏற்கவில்லை, சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர்.
இதில் கடந்த 17-ந்தேதி பல்வேறு அமைப்பினர் நடத்திய போராட்டம், பெரிய கலவரத்தில் முடிந்தது. மாணவி மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், மாணவி ஸ்ரீமதியின் மரணத்தில் மர்ம இருப்பதாக கூறி அவரது உடலை வாங்க பெற்றோர் மறுப்பு தெரிவித்து வந்தனர்.
இதனால் கடந்த 10 நாட்களாக ஸ்ரீமதியின் உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தனது.
மாணவியின் உடலை மறு உடற்கூறாய்வு செய்ய வேண்டும் அதில் தங்கள் தரப்பு மருத்துவர் ஒருவரை அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
மறு உடற்கூறாய்வு செயய நீதிபதி உத்தரவிட்டார்.இதையடுத்து மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள உத்தரவு பிறப்பித்தார்.
இதையடுத்து இன்று காலை உடலை அவரது பெற்றோர் உடலை பெற்றுக்கொண்டனர்.