கள்ளக்குறிச்சி மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு மாதர் சங்கத்தினர் டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

Tamil Nadu Police
By Thahir 1 வாரம் முன்

கள்ளக்குறிச்சி மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு மாதர் சங்கத்தினர் டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

டிஜிபி அலுவலகம் முற்றுகை 

கடந்த ஜூலை மாதம் கள்ளக்குறிச்சியில், கனியாமூர் தனியார் பள்ளியில் பயின்று வந்த 12ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் சென்னையில் போராட்டம் நடைபெற்றது.

kallakurichi-student-death-protest-mathar-sangam

ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், இன்று சென்னை மயிலாப்பூர் டிஜிபு அலுவலகம் முன்பு ஏராளமான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர் இதனால் அந்த பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அது முதலமைச்சர் செல்லும் சாலை என்பதாலும், பதற்றமான சூழல் உருவானது.

பின்னர் போராட்டம் நடத்திய மாதர் சங்கத்தை சேர்ந்தவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாணவிக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளிகள் கண்டறிந்து அவர்கள் மீது போக்சோ சட்டம் பதிய வேண்டும். காவல்துறை இந்த வழக்கில் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த போராட்டத்தில் மாதர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.