கள்ளக்குறிச்சி மாணவி உடல் ஒப்படைப்பு பற்றி அமைச்சர் ஆலோசனை
கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உடலை ஒப்படைப்பது தொடர்பாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி கணேசன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
பெற்றோர் மனு தள்ளுபடி
கள்ளக்குறிச்சி மாணவி மறுஉடற்கூறாய்வு செய்ய வேண்டியும்,தங்கள் சார்பாக ஒரு மருத்துவரை நியமிக்க வேண்டும் என மாணவியின் தந்தை ராமலிங்கம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்தது அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மறுஉடற்கூறாய்வு குறித்த தகவல் உரிய நேரத்தில் மாணவியின் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டதாக கூறினார்.
இதையடுத்து இந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில் மாணவியின் உடலை பெற்றோர் பெற்றுக்கொள்ள உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் ஆலேசானை
இந்த மனு இன்று பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு வர உள்ளது. மேலும் மாணவியின் தரப்பில் மறுஉடற்கூறாய்வு செய்யப்பட்ட அறிக்கையை தங்கள் தரப்பு மருத்துவர்கள் ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மாணவி உடல் ஒப்படைப்பது பற்றி தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன்,மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.