கள்ளக்குறிச்சி பள்ளியை திறக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பெற்றோர்

Kallakurichi School Death Kallakurichi
By Thahir Sep 06, 2022 11:39 AM GMT
Report

கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை விரைந்து திறக்கக்கோரி பெற்றோர்கள் 200-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

கள்ளக்குறிச்சி கலவரம் 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை 13-ஆம் தேதி பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தார். இதனை அடுத்து ஜூலை 17ஆம் தேதி அன்று பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது.

கள்ளக்குறிச்சி பள்ளியை திறக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பெற்றோர் | Kallakurichi School Open Parents Petitioned

இந்த கலவரத்தில் கலவரக்காரர்கள் பள்ளி வளாகத்தில் இருந்து பள்ளி மேஜைகள்,ஆய்வகங்கள்,பள்ளி பேருந்துகள் மற்றும் உள்ளிட்ட பள்ளி வளாகத்தில் இருந்த அனைத்து விதமான பொருட்களையும் கலவரக்காரர்கள் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினார்.

இதனையடுத்து பள்ளி கலவரத்தில் ஈடுபட்டவர்களை வீடியோ மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்து வரும் நிலையிலும் பள்ளி மாணவியின் மரணம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் பள்ளி வளாகத்திற்குள் யாரையும் அனுமதிக்காத நிலை நீடித்து வந்தது.

மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர் கோரிக்கை 

இந்த நிலையில் கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் விரைந்து திறக்க உத்தரவிடகோரி லதா கல்வி சங்கம் பொருளாளர் முருகேசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 23-ம் தேதி மனு தாக்கல் செய்த நிலையில் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் 10 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியை திறப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அறிக்கை தயார் செய்து வருவதாகவும் விரைவில் பள்ளி திறப்பதற்கான அனுமதி வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கள்ளக்குறிச்சி பள்ளியை திறக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பெற்றோர் | Kallakurichi School Open Parents Petitioned

இந்த நிலையில் கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் 200க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மற்றும் இசிஆர் இன்டர்நேஷனல் பள்ளியில் உடனடியாக அனைத்து வகுப்பினருக்கும் நேரடி வகுப்புகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மேலும் பள்ளியை பராமரிக்க அனுமதி வழங்கி உடனடியாக அதே பள்ளியில் நேரடி வகுப்புகளை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என கூறி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

இந்த நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவின் படி அறிக்கை தயார் செய்யப்பட்டு வருவதாகவும், இரண்டு தினங்களில் பள்ளி பராமரிப்பு பணிகளை தொடங்க அனுமதி வழங்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பெற்றோர் சந்திரமோகன் மாவட்ட ஆட்சியர் பள்ளியை திறப்பது குறித்து இரண்டு நாட்களில் அனுமதி வழங்குவதாகவும், மேலும் பள்ளி கலவரத்தில் கலவரக்காரர்களால் எரித்து சேதப்படுத்தப்பட்ட பள்ளி மாணவ மாணவிகளின் சான்றிதழ்களும் 10 நாட்களுக்குள் வழங்கப்படும் என உறுதி அளித்ததாகவும் மாவட்ட ஆட்சியர் அளித்த உறுதி நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருப்பதாகவும் தெரிவித்தார்.