கள்ளக்குறிச்சி கலவரத்தில் மாணவர்களின் ஆவணங்கள் தீயிட்டு கொளுத்தியவர் கைது..!
கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கலவரத்தில் பள்ளிக்குள் நுழைந்து டிசியை தீயிட்டு கொளுத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி கலவரம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதி கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வந்த 12-ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி கடந்த மாதம் 13-ந் தேதியன்று மர்மமான முறையில் இறந்தார்.
மாணவி தற்கொலை செய்துகொண்டதாக பள்ளி நிர்வாகம் கூறிவரும் நிலையில், மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் கூறிவருகின்றனர்.
இந்நிலையில், ஜூலை 17-ம் தேதி மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு ஏராளமானோர் தனியார் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தீயிட்டு கொளுத்தியவர் கைது
இதில் வன்முறை வெடித்தது. பள்ளி வாகனங்கள், மாணவ, மாணவியரின் சான்றிதழ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
இந்த கலவரத்தில் அங்கு படித்த 2 ஆயிரத்து 700 க்கும் மேற்பட்ட மாணவர்களின் சான்றிதழ்கள் தீயிட்டு கொழுத்தப்பட்டது.
இந்த கலவரத்தில் காவல்துறை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் ஏற்கெனவே 322 பேரை கைது செய்ததனர். இந்த நிலையில், சம்பவத்தின் போது அங்கிருந்த சிசிடிவி, மற்றும் சான்றிதழுக்கு தீ வைத்தபோது எடுக்கப்பட்ட வைரலான வீடியோக்களை கடந்த ஒரு வாரமாக அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர்.
அப்போது, கலவரத்தின்போது சக்தி பள்ளியில் அலுவலகத்தில் இருந்த மாணவர்களின் சான்று ஆவணங்களை தீ வைத்து எரித்தவரை அடையாளம் கண்டனர்.