கள்ளக்குறிச்சி கலவரம்; மாணவி உடலை பெற்று கொள்ள பெற்றோர் ஒப்புதல்..!
மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர் பிற்பகல் 2 மணிக்கு கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெற்றோர் மனு தள்ளுபடி
கள்ளக்குறிச்சி மாணவி மறுஉடற்கூறாய்வு செய்ய வேண்டியும்,தங்கள் சார்பாக ஒரு மருத்துவரை நியமிக்க வேண்டும் என மாணவியின் தந்தை ராமலிங்கம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்தது அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மறுஉடற்கூறாய்வு குறித்த தகவல் உரிய நேரத்தில் மாணவியின் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டதாக கூறினார்.இதையடுத்து இந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
உடலை வாங்க வரும் பெற்றோர்
இந்த நிலையில் மறுஉடற்கூறாய்வு செய்யப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் உள்ள மாணவியின் உடலை பெற்றோர் பெற்றுக்கொள் சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து இன்று பிற்பகல் 2 மணிக்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு மாணவியின் பெற்றோர் வர உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.