கள்ளக்குறிச்சி களவரம் : 70 பேருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்
கள்ளக்குறிச்சி பள்ளி கலவர வழக்கில் கைதான கலவர கைதான 70 பேருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி கலவரம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கடந்த மாதம்
17-ந்தேதி நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது.
சி.பி.சி.ஐ.டி. விசாரணை
பள்ளியில் நடந்த களவரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களில் 296 பேர், தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு நீதிபதி பூர்ணிமா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர், இந்த கலவரத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்பான முக்கிய ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததால் 45 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
70 பேருக்கு ஜாமீன்
அதே சமயம், கலவர வழக்கில் கைதான 70 பேருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். மேலும் 178 பேரின் ஜாமீன் மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே 19 சிறார்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.