கள்ளக்குறிச்சி கலவரம் - மேலும் 4 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்
கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக மேலும் 4 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
4 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளியில் கடந்த மாதம் 17-ம் தேதி நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது.
இந்த கலவரத்தின் போது பள்ளியில் இருந்த பொருட்கள் மற்றும் போலீஸ் வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டது. இச்சம்பவம் பற்றி சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது.
இதில் சம்மந்தபட்டவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். இந்த கலவரத்தில் தொடர்புடைய 350க்கும் மேற்பட்டோரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
கலவர வழக்கில் மேலும் 4 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, சர்புதீன், சரண்ராஜ், லட்சாதிபதி, மணி ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.