கள்ளக்குறிச்சி மாணவியின் தாய் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை ரத்து செய்யக்கோரி மாணவியின் தாயார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்
கள்ளக்குறிச்சி கலவரம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூரில் செயல்பட்டு வந்த தனியார் பள்ளியில் பனிரெண்டாம் பகுப்பு வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த ஜுலை மாதம் 13ஆம் தேதி பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இதனையடுத்து மாணவியின் மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு தனியார் பள்ளி வளாகம் முன்பு கடந்த 17ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் பெரும் கலவரம் வெடித்தது.
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
இந்த நிலையில் மாணவி மரண வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 3 நிர்வாகிகள், ஆசிரியைகள் 2 பேருக்கு சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட நிலையில் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் தாளாளர், செயலாளர், முதல்வர் ஆகியோருக்கு அளிக்கப்பட்ட நிபந்தனை ஜாமினை ரத்து செய்ய கோரி மாணவியின் தாயார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.