வன்முறை செய்யும் போராட்டக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் : டிஜிபி எச்சரிக்கை

Tamil nadu Crime
By Irumporai Jul 17, 2022 06:27 AM GMT
Report

கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் மாணவி பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று வெளியானது யடுத்து மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புச் சேர்ந்த இளைஞர்கள் என போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததனர்.

கலவரமான கள்ளக்குறிச்சி

போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் மாணவர்களுக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு வருகிறது இதனால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளிக்கிறது.

வன்முறை செய்யும் போராட்டக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் : டிஜிபி எச்சரிக்கை | Kallakurichi Police Fired Dgp Warning

பாதுகாப்பு பணிக்காக போலீசார்கள் வந்த பஸ் கண்ணாடியை போராட்டக் குழுவினர் உடைத்ததால்  நிலைமையை சமாளிக்க வெளி மாவட்டத்தில் இருந்து கூடுதல் போலீசார் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த போராட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கற்களை வீசி தாக்கிய சம்பவத்தில் கள்ளக்குறிச்சி எஸ்.பி.க்கும், டிஐஜி பாண்டியனுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது  மேலும் 20 காவலர்களும் காயமடைந்துள்ளனர்

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த டிஜிபி சைலேந்திரபாபு :

மாணவி இறப்பு விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார், மேலும் போராட்டம் செய்தவர்கள் கலவரத்தில் ஈடுபட்டது கண்டிக்கதக்கது எனக் கூறியுள்ள டிஜிபி ,வன்முறையில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை செய்யப்படும் என்றும் .

வன்முறை செய்யும் போராட்டக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் : டிஜிபி எச்சரிக்கை | Kallakurichi Police Fired Dgp Warning

பிளஸ் 2 மாணவி உயிரிழப்பு தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, டிஎஸ்பி தலைமையில் புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. மாணவி எழுதிய கடிதம் உள்பட அனைத்து முக்கிய ஆவணங்களும் கைப்பற்றபட்டுள்ளது.

டிஜிபி எச்சரிக்கை

ஆசிரியர்கள் மீதான புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். முழுமையான விசாரணைக்கு பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும். சிபிசிஐடி விசாரணைக்கு தேவை இருக்காது.

வன்முறை செய்யும் போராட்டக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் : டிஜிபி எச்சரிக்கை | Kallakurichi Police Fired Dgp Warning

பள்ளி மீது எந்த தவறும் இல்லை. போராட்டத்தை ஒடுக்க 500 ஆயுதப்படை போலீசார் அனுப்பப்பட்டுள்ளனர். கலவரத்தில் ஈடுபடுபவர்கள் அமைதி காக்க வேண்டும் .உடனடியாக போராட்டத்தை கைவிட வேண்டும்.

வீடியோ காட்சிகளை வைத்து வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதனால் உடனடியாக போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து அவர்கள் செல்ல வேண்டும். போராட்டக்காரர்களை வீடியோ காட்சிகளை வைத்து பின்னர் கைது நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அமைதியாக தொடங்கிய போராட்டம் திடீரென கலவரமாக மாறியுள்ளது. இந்த போராட்டம் தொடர்பாக சமூகவலைதளங்களில் தவறான தகவல் பரப்பக்கூடாது.

போராட்டம் நடத்த வந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். போராட்டக்காரர்களிடம் இருந்து நஷ்டத்தை வசூலித்து அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தருவோம்என தெரிவித்துள்ளார்.