கள்ளக்குறிச்சி ஆட்சியர் மற்றும் எஸ்.பி பணியிட மாற்றம் : தலைமை செயலாளர் இறையன்பு அதிரடி உத்தரவு
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கணியாமூரில் தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி உயிரிழந்ததை கண்டித்து நேற்று நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது.
வழக்கு பதிவு
இந்நிலையில், கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் நடந்த கலவரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மீது கொலை முயற்சியில் ஈடுபடுதல், போலீசாரை பணிசெய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் இடமாற்றம்
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக புதிய ஆட்சியராக ஸ்ரவன் குமார் ஜடாவத் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே மாவட்ட எஸ்பி பணியிட மாற்றத்தை தொடர்ந்து ஆட்சியரும் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.